உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டே பொதுமக்கள் பட்டா சிட்டா நில ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம் – தமிழக அரசு அறிவிப்பு!!
கடந்த 2022,செப்டம்பர் 24 ஆம் தேதி “எங்கிருந்தும் எந்நேரத்திலும்” என்ற இணையவழி சேவையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்தார்.இந்த சேவை மூலம் பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியும்.அது மட்டுமின்றி இணைய வழியாக பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பொதுசேவை மையம்,சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக நிலா உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து பரிசீலனை செய்த பின்னர் பட்டா மாறுதல் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அதை தமிழக அரசு எளிமையாக்கி உள்ளது.இதனால் பொதுமக்கள் பட்டாமாற்றத்திற்கு விண்ணப்பிக்க இனி வட்டாச்சியர்/பொதுசேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
“எங்கிருந்தும் எந்நேரத்திலும்” சேவை
கிராமப்புற நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
நில உரிமையாளர்கள் புல எல்லைகளை அளந்து அத்து காட்டக் கோருவதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
https://eservices.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா/சிட்டா,’அ’ பதிவேடு,’அ’ பதிசிட்டா,புலப்படம் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.அதேபோல் நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல்,நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் ஆகியவற்றை https://eservices.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
https://tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.