சற்றுமுன்: கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம தொற்று!

0
284
Public hospitalization due to mysterious infection

சற்றுமுன்: கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம தொற்று!

சமீப காலமாக தமிழ்நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது டெல்லியில் மர்மமான தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பால் கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் 400க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது எந்த வகையான தொற்று எதனால் அடுத்தடுத்த மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவில்லை.

மேற்கொண்டு குறித்து சுகாதாரத்துறையும் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. அந்த வகையில் டெல்லியில் காசிபாத் என்ற பகுதியில் கிட்டத்தட்ட 400 பேர் இந்த மர்ம தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று சுகாதாரத்துறை விசாரணை செய்கையில் அங்கு உபயோகிக்கும் தண்ணீர் தான் என கண்டறியப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யஅங்குள்ள தண்ணீரை எடுத்து மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இவ்வாறு மக்கள் பாதிப்படைவது குறித்து அங்குள்ளவர்களிடம் கேட்டபொழுது, கழிவு நீர் தொட்டியானது கசிந்து தண்ணீரில் கலப்பதால் இவ்வாறான பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தற்பொழுது நடைபெற்று வரும் வெப்பசலானத்தாலும் இவ்வாறான தொற்றுகள் உருவாகலாம் என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு மாதிரி பரிசோதனை வரும் பொழுது தான் இந்த பாதிப்பு தொற்று எதிலிருந்து வந்தது என்பது குறித்து தெளிவான விளக்கம் தெரியகூடும். அங்குள்ள மக்களின் நலனுக்காக சுகாதாரத்துறை இந்த வாரம் அந்த பகுதியில் முகாமிட்டு அங்குள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி நிறைந்த மருந்து மாத்திரைகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.