Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை!!

#image_title

ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை!!

ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிரான ரிட் மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிரான ரிட் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது

செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ஆம் தேதி முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ அடையாள ஆவணம் தரவோ வேண்டியதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்புக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்யாய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பை தன்னிச்சையானது, நியாயமற்றது, சமத்துவ உரிமைக்கு எதிரானது, செயல்படுத்துக்கூடாது என அறிவிக்க வேண்டும்.

கருப்பு பணத்தை மாற்றுவதை தடுக்கவும், வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை கண்டறியவும், ரூ.2000 நோட்டுகளை கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் மட்டுமே மாற்ற ரிசர்வ் வங்கிக்கும், பாரத ஸ்டேட் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும் என அந்த ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனுவை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பை தன்னிச்சையானது, நியாயமற்றது, சமத்துவ உரிமைக்கு எதிரானது, செயல்படுத்துக்கூடாது என அறிவிக்க வேண்டும் என மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாயா வாதிட்டார்.

பொருளாதாரக் கொள்கை சார் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 2000 நோட்டுகளை மாற்றும் விவகாரம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையாக கொள்ள முடியாது என்றும், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், ரிட் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

Exit mobile version