Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வங்கி பணிக்கு முயற்சிப்பவர்களுக்கு குட் நியூஸ்! உடனே செய்யுங்க

வங்கி பணிக்கு முயற்சிப்பவர்களுக்கு குட் நியூஸ்! உடனே செய்யுங்க

பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் 6128 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அனைவரும் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

பொதுத்துறை வங்கிகளில் தற்பொழுது கிளர்க் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் உள்ள 6128 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மூலமாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்டி, எஸ்சி 175 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. பொதுப் பிரிவினருக்கு 850 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக வசூல் செய்யப்படுகின்றது.

பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க www.ibps.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு ஜூலை 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதத்திலும் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இந்த தேர்வை எழுத ஆகஸ்ட் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது.

Exit mobile version