புதிய ஊரடங்கில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி

0
151
Tamil Nadu Government New Anouncement for Free Bus Fare

புதிய ஊரடங்கில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி

தமிழ்நாட்டில்‌ கொரோனா இரண்டாம் அலையால் பரவி வந்த நோய்த் தொற்று பெரும்பான்மையான மாவட்டங்களில்‌ தற்போது குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன்‌ தற்போதுள்ள இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய்த்‌ தொற்று பாதிப்பின்‌ அடிப்படையில்‌ தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் ஏற்கனவே பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 – (11 மாவட்டங்கள்‌)

கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, களூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌

வகை 2 – (23 மாவட்டங்கள்‌)

அரியலூர்‌. கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, வேலூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்கள்‌.

வகை 3 – (4 மாவட்டங்கள்‌)

சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌

புதிய ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள்:

வகை 2 – இல் அரியலூர்‌, கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, வேலூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ ஆகிய 23 மாவட்டங்கள் இடம்பெற்றது. வகை 3 – இல் சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றது.

இந்த வகை 2  மற்றும் வகை 3 இல் உள்ள 23 மாவட்டங்களுக்கும் சேர்ந்து பொதுப்போக்குவரத்துக்கு சேவையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்துகள் கொரோனா விதிமுறையுடன் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்து தொடங்கப்படுகிறது. மக்கள் எதிர்பார்த்த மாதிரியே தமிழக அரசு பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கியுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.