Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொதுப் போக்குவரத்தை மக்களின் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளலாம்:! தமிழக அரசின் அசத்தல் ஐடியா!

தொற்றுக் காரணமாக அனைத்து போக்குவரத்தும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து முடக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொற்று குறைவாக உள்ள சில மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் உள் மாவட்ட பொது போக்குவரத்துகள் மட்டும் இயக்கப்பட்ட நிலையில் மீண்டும் பொது போக்குவரத்தினால் தொற்று பரவுதல் அதிகரித்ததால் பொது போக்குவரத்து மீண்டும் முடக்கப்பட்டது.இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஒரு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு விரைவு பேருந்து மற்றும் பொதுபோக்குவரத்து கழக பேருந்துகளை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

அதாவது பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அழைத்து வருவதற்கும்,திருமண நிகழ்ச்சிகள் போன்ற தொலைதூர பயணித்திருக்கும் பொது போக்குவரத்தை வாடைக்கு எடுத்து மக்கள் தங்களது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது

ஒப்பந்த அடிப்படையில் அரசு விரைவு பேருந்தை பயன்படுத்த விரும்புவோர், தொடர்பு கொள்ள மின்னஞ்சல் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்துகள் தேவைப்படுவோர், tnexpress16gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் 9445014402- 9445014416- 9445014424 மற்றும் 9445014463 
ஆகிய கைபேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version