Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாலை விரிவாக்கத்தை தடுக்க முடியாது சாலை விரிவு படுத்தவில்லை என்றால் எப்படி கார் ஓடும் எ வ வேலு கேள்வி?

#image_title

சாலை விரிவாக்கத்தை தடுக்க முடியாது சாலை விரிவு படுத்தவில்லை என்றால் எப்படி கார் ஓடும் எ வ வேலு கேள்வி?

சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு சாலை விரிவு படுத்துவதை தவிர்க்க முடியாது என பேசினார்.

சாலை என்று சொன்னால் பசுமை தேவை மரத்தை வெட்டினால் பாமக ஒற்றுக் கொள்வதில்லை . சாலை விரிவுப்படுத்துவதை எந்த காலத்திலும் தவிர்க்க முடியாது. சாலை விரிவுபடுத்தி தான் ஆக வேண்டும் சாலை விரிவுபடுத்த விட்டால் எப்படி கார் போகும்? சாலை விரிவு படுத்தாவிட்டால் உற்பத்தி செய்கிற பொருள் எப்படி நகரத்துக்கு வரும்? சாலை விரிவு படுத்தவில்லை என்று சொன்னால் உற்பத்தி செய்கின்ற பொருள்கள் எப்படி துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முடியும்? வெளிநாட்டுக்கு எப்படி செல்லும்? சாலைகளை விரிவுபடுத்தி தான் ஆக வேண்டும். அப்படி சாலைகளை விரிவு படுத்துகிற போது மரங்களை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது . அப்படி மரத்தை வெட்டுகிற பொழுது ஒரு மரத்தை வெட்டினால் இனிமேல் பத்து மரத்தை வைக்க வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு உள்ளோம்.

 

Exit mobile version