திமுக அமைச்சர்களின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல் வெளியீடு! யாருக்கு எவ்வளவு சொத்து அண்ணாமலை அறிவிப்பு!!

0
233
Publication of list of assets of DMK Ministers! Who owns how much property Annamalai announcement!!

திமுக அமைச்சர்களின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல் வெளியீடு! யாருக்கு எவ்வளவு சொத்து அண்ணாமலை அறிவிப்பு!!

தமிழக பாஜக தலைவராக கர்நாடக மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாள் முதல் திமுகவிற்கும் பாஜகவிற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது என்றால் அது மிகை ஆகாது, தினம் தோறும் திமுக மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் குற்ற சாட்டுக்கள் கூறி வந்தார் அண்ணாமலை.

அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வண்ணம் திமுக அமைச்சர்கள் அவ்வப்போது ஏதாவது ஒன்று சொல்வது உண்டு, அதிலும் குறிப்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அண்ணாமலைக்கும் தான் ஏழாம் பொருத்தமாக இருக்கும். இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை தெரிவித்து சில கடுமையான வார்த்தைகளை அள்ளி தெளிப்பது உண்டு.

இவர்களுடைய வார்த்தை போரில் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவிய நிலையில், கடந்த மாதம் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியிட போவதாக அறிவித்து வந்தார். இதனிடையே இன்று அவர் கூறியபடி முதற்கட்டமாக திமுகவின் முக்கிய அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.

அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் திமுக எம்பிக்கள் ஜெகத்ரட்சகன் 1,033.35 கோடி, கனிமொழி கருணாநிதி 830.33 கோடி, டி ஆர் பாலு 10,841.10 கோடி, கதிர் ஆனந்த் 579.58 கோடி, கலாநிதி வீராசாமி 2,923.29 கோடி, தமிழக அமைச்சர்கள் வேலு 5,442.39 கோடி, கே என் நேரு 2,495.14 கோடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி 1,023.22 கோடி, துரைமுருகன், பொன்முடி 581.20 கோடி, சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் 12,450 கோடி, முதல்வரின் மருமகன் சபரீசன் 902.46 கோடி, இதற்கு எல்லாவற்றிலும் மேலாக தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி 2,039 கோடி, உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு என  1.31 லட்சம் கோடி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் திமுகவின் இரண்டாம் கட்ட சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட உள்ளதாக கூறிய அவர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் பெறுவதாகவும், அவர்  கேட்ட ரபேல் கைகடிகாரம் வாங்கியதற்கான ரசீதையும் காண்பித்து இரண்டாம் கட்ட சொத்து பட்டியல் இதை விட அதிர்ச்சிகரமானதாக இருக்கும் என தெரிவித்தார்.