திமுக கூட்டணியில் இருந்து திடீரென்று வெளியேறிய முக்கிய கட்சி! அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!

0
135

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது அதன் காரணமாக, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பற்றிய முடித்துக்கொண்டு வேட்பாளர் பட்டியல் வெளியீடு வீட்டிலிருந்து வேட்புமனுவை தாக்கல் செய்யவும் தொடங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. புதுச்சேரியில் தமிழகத்தை போலவே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து இருக்கிறது. என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அதிமுக என்று மற்றொரு கூட்டணி இருந்து வருகிறது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே புதுவையில் இரண்டு அணிகளுமே கூட்டணி இறுதி செய்யப்படாமல் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனைத்தொடர்ந்து தற்சமயம் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் திமுக 13 தொகுதிகளிலும் களம் காண்கின்றனர் . நேற்று அண்ணா அறிவாலயத்தில் புதுச்சேரியின் முன்னாள் முதல்அமைச்சர் நாராயணசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக.

இதுபோன்ற சூழ்நிலையில், புதுவையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் என எல்லோரும் ஒன்று கூடி ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி இடம் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி வைக்க தேவையில்லை என்று அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை கொடுத்து வலியுறுத்தி இருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது.இதனால் திமுக தலைமை சற்று அதிர்ந்து போய் இருப்பதாக சொல்கிறார்கள்.