Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முக்கிய தொகுதியின் வேட்பாளரை காணவில்லை! வேட்பாளரின் மனைவி பரபரப்பு புகார்!

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஆன நாளை தமிழகம் கேரளா புதுவை ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் இந்த மாநிலங்களுக்கான பிரச்சாரங்கள் நேற்று இரவு 7 மணி உடன் நிறைவடைந்திருக்கிறது.

இந்த நிலையில், இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் யாரும் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் இருக்கின்ற ஏனாம் சட்டசபை தொகுதியில் சுயேச்சை வேட்பாளரை காணவில்லை என்று அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த தொகுதியில் தான் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதலமைச்சர் வேட்ப்பாளராக களமிறங்குகிறார் .

இந்த தொகுதியில் தான் சுயேட்சை வேட்ப்பாளராக துர்கா பிரகாஷ் என்பவர் போட்டியிடுகிறார். சென்ற சில தினங்களாக துர்கா பிரகாஷை காணவில்லை என்று அவருடைய மனைவி ஏனாம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்ததாவது, தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற தன்னுடைய கணவரை கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவருடைய மனைவி புகார் தெரிவித்து இருக்கிறார் என தெரிவித்தார்கள்

.அதோடு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் இந்த விவகாரம் குறித்து அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.புதுச்சேரியின் முதலமைச்சர் வேட்ப்பாளராக களமிறங்கி இருக்கும் ரங்கசாமியின் தொகுதியில் சுயேட்சை வேட்ப்பாளரை காணவில்லை என்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Exit mobile version