மூன்று கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

0
102

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சென்ற 10 வருடகாலமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அந்த மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் செய்து முடித்தது.

அதோடு மேலும் 5 நகராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரி ,காரைக்கால், மாகி, ஏனாம் போன்ற பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்றையதினம் அறிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கின்றஅறிவிப்பின் அடிப்படையில் புதுச்சேரியில் வருகின்ற அக்டோபர் மாதம் 23 மற்றும் 25 மற்றும் 28 உள்ளிட்ட தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 25 நகராட்சி சேர்மன் மற்றும் 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1149 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கடைசி ஒரு மணி நேரம் நோய்த்தொற்று பாதித்தவர்கள் வாக்களிக்கலாம் எனவும், அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வரையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், கூறப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக காரைக்கால், மாகி ,ஏனாம், உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது அதேபோல இரண்டாவது கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது மூன்றாவது கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம், வில்லியனூர் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.