புதுச்சேரியில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ்! கட்சி பெரு மகிழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

0
109

பாண்டிச்சேரி மாநிலத்தில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த நமச்சிவாயம் இன்று காலை 11 30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில், பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

புதுவையில் அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் 2வது அமைச்சராக இருந்து வந்தவர் நமச்சிவாயம். நாராயணசாமி மீது இருக்கின்ற அதிருப்தி காரணமாக, நமச்சிவாயம் தன்னுடைய அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்திருக்கிறார். அவருடன் ஊசுடு தனித் தொகுதியை சார்ந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தானும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் இரண்டு பேரும் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவை நேரில் சந்தித்து கொடுத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அந்த இரண்டு பேரின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் சட்டசபை உறுப்பினர் தீயப்பயந்தான் ஆகியோர் நேற்று மாலை டெல்லிக்கு கிளம்பிச் சென்று இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து நமச்சிவாயம் இன்று காலை 11 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து அமித்ஷா முன்னிலையில், பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அதன் பிறகு புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் நமச்சிவாயம் எதிர்வரும் 31ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற இருக்கும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா அவர்கள் பங்குபெரும் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரியில் இருக்கக்கூடிய அவருடைய ஆதரவாளர்கள் அனைவரையும் பாஜகவில் இணைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.