Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேங்கை வயல் விவகாரம்: 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவு!

#image_title

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் அந்த பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுப்பதற்கு சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.

விரைவில் சிறப்பு மருத்துவர்கள் குழு தலைமையில் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள 11 பேரிடம் டி என் ஏ ரத்த பரிசோதனை செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் தயார் நிலை உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக்கடவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அதனை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

சிபிசிஐடி போலீசார் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை செய்து வந்த நிலையில் அவர்கள் 147 நபர்களிடம் இதுவரை விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள் நான்கு மாதங்கள் ஆகியும் கைது செய்யப்படாத சம்பவம் அரசியல் கட்சிகளிடையே பல்வேறு விவாத பொருளாக மாறியது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை உரிய முறையில் விசாரணை செய்வதற்கு ஒரு நபர் குழுவை அமைத்து அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதியையும் தலைமையில் நடக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சிபிசிஐடி போலீஸ் தங்களுடைய விசாரணையில் 11 பேரை சந்தேகப்படுவதாகவும், அவர்களுடைய டி என் ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அதற்கு நீதிமன்றம் உத்தரவு அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதை விசாரணைக்கு ஏற்ற மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சத்யா சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று 11 பேர் இடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டதோடு அந்த 11 பேரையும் அந்த ஆர்டரின் பட்டியல் இட்டு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறப்பு மருத்துவர்கள் குழு இன்னும் இரு தினங்களில் பதினோரு பேரிடமும் டிஎன்ஏ ரத்த பரிசோதனை செய்யப்படும் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version