பூஜை முடிந்தது புடவையை கழட்டுங்க! அநாகரிகமாக நடந்த சித்த மருத்துவர்!
பெண்களுக்கு தொடர்ந்து வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே தான் உள்ளது.பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலை செய்யும் இடங்கள் வரை பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருகிறது.பொதுவாக உடல் ரீதியாகவோ அல்லது குடும்பத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பொழுதும் அதனை எதிர் கொள்ளாமல் மக்கள் பல்வேறு பூஜைகளையும் தேடி செல்கின்றனர்.உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நன்கு அறிந்த மருத்துவரிடம் செல்லாமல் போலி மருத்துவரிடம் சென்று மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு குஜராத்தில் தற்போது ஓர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கிர் சோம்நாத் என்ற மாவட்டம் ஒன்று உள்ளது.இந்த மாவட்டத்தில் கோடினார் என்ற பகுதி உள்ளது.இந்த பகுதியில் வசிப்பவர் தான் ஷீலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அருகில் உள்ள சித்த மருத்தவமனைக்கு சென்றுள்ளார்.அந்த மருத்துவர் அந்த பெண்ணின் உடலை பரிசோதனை செய்தார்.அவ்வாறு செய்து அந்த பெண்ணின் உடலில் ஆவி இருப்பதாக கூறியுள்ளார்.அதனை விரட்ட வேண்டுமென்றால் நீ உனது கல்யாணத்தின் போது உடுத்திய புடவையை கட்டி வர வேண்டும்.அதன்பிறகு நான் பூஜை செய்து அதனை விரட்டி விடுவேன் என்று கூறியுள்ளார்.
அந்த பெண்மணியும் அதனை நம்பி அடுத்த நாள் அவரது கல்யாண புடவையை உடுத்தி சென்றுள்ளார்.அவருடன் அவரது மாமியாரும் சென்றுள்ளார்.அந்த மருத்துவர் அவரது மாமியாரை வெளியே காத்திருக்கும்படி முதலில் கூறியுள்ளார்.அதனையடுத்து அந்த பெண்மணிக்கு பூஜை செய்துள்ளார்.பூஜை முடித்தவுடன் சில மாத்திரைகள் கொடுத்து சாப்பிடும் படி கேட்டுள்ளார்.அந்த பெண்மணியும் நமக்கு வியாதீ சரியானால் போதும் என்று என்னி அந்த மருத்துவர் கூறியது போல செய்துள்ளார்.அதனையடுத்து பூஜை முடிந்துவிட்டது புடவையை மாற்றிக்கொள்ளும்படி அந்த மருத்துவர் கூறியுள்ளார்.அந்த பெண்மணியும் சரி என்று கூறிவிட்டு புடவையை மாற்றியுள்ளார்.அவ்வாறு மாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த மருத்துவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த பெண் மாத்திரை சாப்பிட்டதால் ஏதும் தெரியவில்லை.பின்பு மயக்க நிலையிலிருந்து திரும்பியதும் தனக்கு நடந்ததை அவரது கணவரிடம் கூறியுள்ளார்.பின் அவரது கணவர் அந்த போலி மருத்துவர் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.அதனையடுத்து அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மக்கள் சிறிதாவது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.நமது உடலிலோ அல்லது வீட்டிலோ ஏதேனும் பிரச்னை நிலவினால் தக்க மருத்துவரை காண வேண்டும்.வீட்டில் ஏதேனும் அசாம்பாவிதங்கள் நடந்தால் கடவுள் பிராத்தனை மேற்கொள்ள வேண்டும்.அதனைவிட்டு இவ்வாறு போலியானவர்களிடம் சிக்கி பெரும் துயரத்துக்கு ஆளாகிவிடுகின்றனர்.