5 ஏக்கர் நிலம் இருந்தால் 50 சதவீதம் மானியத்துடன் பம்பு செட்! தமிழக அரசு அறிவிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி! 

0
207
Pump set with 50 percent subsidy if you have 5 acres of land! Tamil Nadu government announcement! Farmers are happy!

 

விவசாயிகளிடம் 5 ஏக்கர் நிலம் இருந்தால் அதற்கு பம்பு செட் வாங்குவதற்கோ அல்லது ஏற்கனவே இருக்கும் பம்பு செட்டை மாற்றுவதற்கோ 50 சதவீதம் மானியத்துடன்  பயன்பெறும் வகையில் தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசானது தற்பொழுது அனைத்து மக்களின் நலனுக்காகவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தமிழக அரசு விவசாயிகளுக்காகவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசு தொடர்ந்து விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் இ வாடகை செயலி, சூரிய ஒளி மூலமாக இயங்கும் பம்ப்செட் நிறுவும் திட்டம், விளை பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல், உழவர் சந்தை திட்டத்தை வலிமைபடுத்தும் திட்டம், சிறு, குறு விவசாய இளைஞர்களுக்கு பயிற்சி, வேளாண்மையில் தொழில்முனைவோர்களை உருவாக்குதல், போன்று பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகளுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.

என்னதான் விவசாயிகள் நலன் குறித்த அதிக அறிவிப்புகள் இருந்தாலும் விவசாயிகளுக்கு அதிகம் பிடித்த மற்றும் அதிகம் அவர்களை ஈர்க்கும் திட்டம் எதுவென்றால் பம்ப்செட் குறித்த அறிவிப்புகள் மட்டுமே ஆகும். ஏன் இந்த திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பிடித்த திட்டம் என்றால் குறைந்த திறன் கொண்ட பம்ப்செட்டுகளை மாற்றுவதற்கு உதவி செய்கின்றது.

விவசாயிகள் குறைந்த திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தும் பொழுது நீர் பாய்ச்சும் நேரம் அதிகமாகின்றது. மின்சார கட்டணம் அதிகமாகின்றது. மேலும் பயிர்களுக்கு அதிகமாக நீர் பாய்ச்ச முடியாமல் போகின்றது. இந்த பிரச்சனைகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கவே பம்ப்செட் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் புதிதாக அதிக திறன் கொண்ட மின்மோட்டார்கள் வாங்குவதற்கும், ஏற்கனவே இருக்கும் பம்ப்செட்டுகளை மாற்றுவதற்கும் மானியத்துடன் உதவி பெற்றுக் கெள்ள வழிவகை செய்கின்றது.

அந்த வகையில் ஏற்கனவே வைத்திருக்கும் பழைய பம்புசெட்டை மாற்றி புதிய மின்மோட்டார் அடங்கிய பம்ப்செட்டை நிறுவுவதற்கு இந்த திட்டத்தின் கீழ் மானிய உதவி வழங்கப்படுகின்றது. அதே போல 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும் இந்த மானியம் வழங்கப்படுகின்றது. மேலும் இந்த திட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.

வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக விவசாயிகள் இந்த மானியத்தை பெற்றுத் கொள்ள முடியும். அந்த வகையில் மானியத்தை பெறும் பொழுது அவர்களின் விவரத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் புதிய மின் மோட்டார் பம்ப்செட் வாங்கும் பொழுது அந்த வகையில் 50 சதவீதம் அல்லது 15000 இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

மேலும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் பழைய மின்மோட்டார் பம்ப்செட்டை மாற்றுவதற்கும், புதிதாக கிணறு வெட்டி சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகின்றது.

சுமார் 5000 சிறு குறு விவசாயிகள் இந்த பம்ப்செட் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் தமிழக அரசு கடந்த 2023ம் வருடம் 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு 1000 பம்ப்செட் வழங்குவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் 4 ஸ்டார்களுக்கு குறையாத மின் மோட்டார்களை வாங்கிக் கொள்ளலாம். அதிலும் அரசு ஒப்புதல் அளிக்கும் புதிய மின் மோட்டார்களையே விவசாயிகள் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் தற்பொழுது வரை நுண்ணீர் பாசன அமைப்பினை நிறுவிடாமல் இருக்கும் விவசாயிகள் புதிதாக நுண்ணீர் பாசன அமைப்பை நிறுவ விரும்பினால் நேரடியாக https://mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திற்கும், உழவன் செயலி மூலமாகவும், எம்.ஐ.எம்.ஐ.எஸ் என்ற இணையதளம் மூலமாகவும் நுண்ணீர் பாசன வசதியை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த மானியம் பெறுவதற்கு ஆதார் அட்டை, சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், புகைப்படம், வங்கிக் கணக்கு, ஆதி திராவிடர் பழங்குயினர் வகுப்பை சேர்ந்தவர் என்றால் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விவரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு சான்றிதழ், புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான விலைப் பட்டியல் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். அனைவருக்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதால் புதிதாக அதிக திறன் கொண்ட மின்மோட்டாரை வாங்கி பயன்பெற்றுக் கொள்ளலாம்.