Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செய்த தவறுக்கு தண்டனை! இளைஞன் மீது சிறுநீர் அபிஷேகம்! 6 பேர் மீது வழக்கு!

ராஜஸ்தானில் இளைஞனை மர்மநபர்கள் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சிரோகி என்னும்  மாவட்டத்திற்கு உட்பட்ட பாலாடி கிராமத்தில் வசித்துவந்த 24 வயது இளைஞர் ஒருவர் மாமா வீட்டிற்கு சென்றபோது, அவரை சில மர்ம நபர்கள் சேர்ந்து தாக்கி பின் சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர். இந்த  அவலநிலையை வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இதை கண்ட சமூக ஆர்வலர்கள் அந்த வீடியோவை அம்மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பார்க்கும் வகையில், சமூகவலைதளத்தில் அவர்களை tag  செய்து பதிவிட்டு இருந்தனர். பின் அதிகாரிகள் பார்வைக்கும் வீடியோ செல்ல, இதுகுறித்து உடனடியாக காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட இளைஞன் தனது மாமா வீட்டிற்கு சென்று வரும் சாக்கில் அதே பகுதியில் உள்ள திருமணமான பெண் ஒருவரிடம் நெருக்கமாக பழகி கள்ளகாதல் வைத்து வந்துள்ளார். இளைஞனின்  செயலால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்து மக்கள் அவனைத் தாக்கி சிறுநீர் குடிக்கச் செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு  செய்ததுடன், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version