நாளை முதல் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு… 11 மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர்…!

0
139
School

இந்தியாவை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 39 ஆயிரத்து 726 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 15 லட்சத்து 14 ஆயிரத்து 331யைக் கடந்துள்ளது. 2 லட்சத்து 71 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு கோடியே 10 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிடம் இருந்து மீண்டுவந்துள்ளனர்.

Punjab

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தொடங்கிவிட்டதோ? என மக்கள் அச்சத்தில் உறையும் அளவிற்கு தொற்று தீவிரமடைந்து வருகிறது. மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநிலத்திற்கும் அம்மாநில முதலமைச்சர் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். மார்ச் 31ம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகளைத் தவிர அனைத்து கல்வி நிலையங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

முதற்கட்டமாக பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் வேகமாக பரவி வரும் ஹரியானா, ஜலந்தர், பாட்டியாலா, மொஹாலி, அமிர்தசரஸ், ஹோஷியார்பூர், கபுர்ஹலா, எஸ்.பி.எஸ்.நகர், ஃபதேஹ்கர், சாஹிப், மோகா ஆகிய 11 மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு பிறக்கப்பிக்கபட்டுள்ளது. அதேபோல் அந்த 11 மாவட்டங்களிலும் எந்தவிதமான கூட்டத்திற்கும் அனுமதி கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க 20 பேருக்கு மட்டுமே அனுமதி. ஷாப்பிங் மால்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி, தியேட்டர்களில் 50சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஷாப்பிங் மால்கள், ஓட்டல்கள், கடைகள், தியேட்டர்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.