Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபடுவது ஏன்?

புரட்டாசி என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது விஷ்ணு பகவானுக்கான ஆராதனைகள் தான் சூரியன் எந்த ராசியில் சஞ்சாரம் செய்கிறாரோ, அந்த ராசிக்குரிய தேவதைகளை வழிபடுவது நம்முடைய மரபு ஒவ்வொரு ராசிக்கும், மாதத்துக்கும் உரிய அதி தேவதையை தெய்வங்களை நம்முடைய சமயம் சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பிட்ட அந்த தேவதையை முறைப்படி வழிபடுவதால் நம்முடைய வாழ்வுக்கு தேவையான வளங்களையும், மோட்சம் என்று சொல்லும் உயர்ந்த பலனையும் ஒன்றாக அடையலாம்.

அந்த விதத்தில் புத்திக்கு அதிபதியான புதன் பகவானின் மிதுனம், கன்னி என்ற இரு வீடுகளில் புதன் உச்சம் அடைந்திருக்கும் கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதத்தில் அதி தேவதையான மகாவிஷ்ணுவை வழிபடுவது உயர்ந்த பலன்களை பெற்றுத் தரும்.

Exit mobile version