கோலாகலமாக கொண்டாடப்படும் பூரி ஜெகந்நாதர் தேர் திருவிழா!! உற்சாகத்தில் பக்தகோடிகள்!!..
ஒடிசா மாநிலம் பூரியில் சிறந்த புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இம்மாதம் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள புரியில் சிறந்து விளங்கி வரும் புகழ்பெற்ற ஜெகநாதன் கோவில் உள்ளது. கோவிலில் இன்று முதல் தேர் திருவிழா மிக சுவாரசியமாக ஆரம்பித்து வருகிறது.தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.
பாரம்பரிய வழக்கம் படி இத்தேர் திருவிழா 42 நாட்கள் வரை நடக்கும் என இவ்வூரின் ஐதீகம். திருவிழாவானது நீண்ட நாட்களுக்கு சிறப்பாக நடந்து முடியும்.இத்தேர்வெல்லாத்தினால்செய்யப்பட்டதாகவும்சொல்லப்படுகிறது.பக்த கோடிகள் அனைவரும் கண்கொள்ளாக் காட்சியாய் பார்த்து ரசித்து வருகின்றார்கள். இங்கு பிரகாசமான வண்ண விளக்குகளால் அக்கோயில் முழுக்க அலங்கரிப்பார்கள். பக்தர்கள் அதைப் பார்த்து ரசித்து வருவார்கள்.
இங்கு பல வண்ணமயமான கடைகளும் மற்றும் கைவினைப் பொருட்களும் இடம்பெறும். இத்தேர் திருவிழாவை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் அமர்த்தப்படுகின்றார்கள். இத்தேரில் ஜெகநாதன் மற்றும் தேவி சுபத்ரா பாலபதரா ஆகிய கடவுள்கள் வலம் வர உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் முகநூலில் அவரது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் இந்த தேரோட்டத்தின் சிறப்பு நாளில் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். ஜெகநாதரின் நிலையான ஆசீர்வாதத்திற்காக நம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம். நாம் அனைவரும் ஆரோக்கியத்துடனும் , மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என முகநூலில் பிரதமர் நரேந்திர மோடி தன் உரையாடலை பதிவிட்டுள்ளார்.