RRR பட சாதனையை முறியடித்த புஷ்பா-2!! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

0
112
Pushpa 2 has collected Rs 175 crores on its first day of release
Pushpa-2 Movie: புஷ்பா-2 திரைப்படம் வெளியான முதல் நாளில்  ரூ.175 கோடி வசூல் செய்து இருக்கிறது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான தான் புஷ்பா-1 இந்த படத்தில் கதாநாயகனாக  அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் என திரைப்பட பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் புஷ்பா-2 திரைப்படம் எடுக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தார்கள்.

இரண்டு வருடங்களாக புஷ்பா-2 திரைப்படம் இயக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து இருந்தார்கள். இந்த படத்தின்  ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நவம்பர்-17 அன்று பாட்னாவில் நடந்தது. இதில் பல லட்ச கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. மேலும் நேற்று,டிக்கெட் வசூல் மட்டும் சுமார் 100 கோடியை தாண்டி இருந்தது.
இந்த நிலையில் நேற்று டிசம்பர்-5 அன்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் கொண்ட நீண்ட திரைப்படமாக இருக்கிறது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்தியாவில் மட்டும் முதல் நாள் வசூலாக சுமார் 175 ரூபாய் வசூல் செய்து இருக்கிறது.
இது ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான 2022 ஆம் ஆண்டு வெளியான  RRR திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ஆனா ரூ.133 கோடி முறியடித்து இருக்கிறது. இந்திய அளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் சாதனையில் முதல் இடத்தில் இருக்கிறது இந்தப் படம். சந்தன மரம் கடத்தல் தொடர்பான கதைக்களமாக இந்த படம் இருக்கிறது. மேலும் புஷ்பா-3 படத்தின் தொடக்க லீடாக இந்த படம் அமையும் என இயக்குனர் சுகுமார் தெரிவித்து இருந்தார்.