Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அப்படி போடு! அரசு பணியாளர்களுக்கு அட்வான்ஸாக பணம்! மத்திய அரசின் அசத்தல் திட்டம்! 

Put it that way! Money rain jackpot in advance for government employees ..!

Put it that way! Money rain jackpot in advance for government employees ..!

அப்படி போடு! அரசு பணியாளர்களுக்கு அட்வான்ஸாக பணம்! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

அரசு பணியாளர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு பணியாளர்களுக்கு கணினி வாங்குவதற்கு  அட்வான்ஸாக 50,000 ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு பணியாளர்கள் இதனைப் பயன்படுத்தி ஐபேட் வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே இதற்காகவே 50,000 ரூபாய் அட்வான்ஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் மற்றும் கணினி மையத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக அரசு பணியாளர்களுக்கு அதி நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்வதை ஊக்குவிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
அரசு பணியாளர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தனிநபர் கணினி வாங்குவதற்காக 50,000 ரூபாய் வரை அட்வான்ஸ் தொகை பணியாளர் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதற்கான விதிமுறைகள் 2016 அக்டோபர் மாதம் நிதியமைச்சகத்தால் திருத்தப்பட்டது. இந்த சலுகையை அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதில்  கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கணினி வாங்குவதற்கு வழங்கப்படும் அட்வான்ஸ் தொகையை வைத்து மத்திய அரசு பணியாளர்கள், ஐபேட் வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, இனி மத்திய அரசு பணியாளர்கள் ஐபேட் வாங்குவதற்கு கணினி அட்வான்ஸ் தொகையை பயன்படுத்தலாம்.

கணினி அட்வான்ஸ் தொகையை பயன்படுத்தி ஐபேட் வாங்கலாமா என அரசு பணியாளர்கள் தரப்பில் அதற்கான விளக்கம் கேட்கப்பட்டு வந்த நிலையில் , கணினி அட்வான்ஸ் பயன்படுத்தி அரசு ஊழியர்கள் ஐபேட் வாங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐபேட்கள் தனிநபர் கணினி என்ற வரையறைக்குள் வருவதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு அறிவித்த அறிக்கையின் படி விரைவில் செயல்படுத்தப்படும் என  கூறப்படுகிறது.

Exit mobile version