Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருப்பதி திருமலையில் செல்போனில் வழியை தெரிந்து கொள்ள புதிய வசதி

திருப்பதி திருமலையில் செல்போனில் வழியை தெரிந்து கொள்ள புதிய வசதி

திருப்பதி திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் இல்லங்கள், விடுதி வளாகங்கள், வைகுந்தம் வரிசை வளாகங்கள், லட்டு கவுண்ட்டர்கள், மருத்துவமனை, போலீஸ் நிலையங்கள், விஜிலென்ஸ் அலுவலகங்கள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் திருமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோவிலை தவிர மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் மற்றவர்களிடம் வழியை அடிக்கடி கேட்டு தெரிந்து கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது.

பக்தர்களின் இந்த சிரமத்தை போக்க தேவஸ்தானம் புதிய வசதியை உருவாக்கி உள்ளது. அதன்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆன்ட்ராய்டு போன் வைத்திருந்தால் அதில் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.

அவ்வாறு ஸ்கேன் செய்தால் பக்தர்கள் பஸ் நிலையத்தில் இருந்து முதன்மை செயல் அலுவலர் அலுவலகம், வைகுந்தம் கியூ வளாகம் உள்ளிட்ட துறை வாரியாக பெயர்கள் அனைத்தும் தெரியும். அதில் பக்தர்கள் எங்கு செல்ல விரும்புகிறார்களோ அதை கிளிக் செய்தால், அதற்கான வரைபடம் காட்டப்படும்.

அதன்மூலம் நேரடியாக அந்த இடத்திற்கு செல்லலாம். இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன

Exit mobile version