தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் தொலைக்காட்சி வாயிலாகவும், ஆன்லைன் மூலமாகவும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தால் தற்சமயம் காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கும். அதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் 25ம் தேதி வரை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த காலாண்டு விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.