Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்து மகாராணி முடிசூடும்போது எப்படி இருந்தாங்க தெரியுமா? வீடியோவை மிஸ் பன்னாதீங்க!

queen elizabeth coronation

queen elizabeth coronation

இங்கிலாந்து மகாராணி முடிசூடும்போது எப்படி இருந்தாங்க தெரியுமா? வீடியோவை மிஸ் பன்னாதீங்க! இங்கிலந்து நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடி நேற்றுடன் 68 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1953ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்தின் பாரம்பரிய முறைப்படி இரண்டாம் எலிசபத் மகாராணியாக முடிசூடும் நிகழ்ச்சி நடைபெற்றது. லண்டனில் உள்ள வெஸ்மினிஸ்டன் அபேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்தை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். முடிசூடும் நிகழ்ச்சியை ரேடியோ மூலமாக பல லட்சம் பேர் நேரடியாக கேட்டனர். முடிசூடும் போது இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு வயது 27. அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கு வயது 31. வெஸ்மினிஸ்டர் அபேவில் 38வது மகாராணியாக இரண்டாம் எலிசபெத் முடிசூடிக்கொண்டார். அவர் முடிசூடும் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் எத்தனையோ பேர் முடிசூடியிருந்தாலும், அந்த நிகழ்ச்சியை ஏடுகளில் மட்டுமே படித்து தெரிந்து கொள்ள முடியும். ஆனால், மகாராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடும் நிகழ்ச்சியை எல்லோரும் பார்க்க முடியும். இரண்டாம் எலிசபெத் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடித்ததற்கு இந்த வீடியோ முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
Exit mobile version