காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி!!! எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சூப்ர்ஸ்டார்!!! 

0
94
#image_title

காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி!!! எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சூப்ர்ஸ்டார்!!!

படப்பிடிப்புக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நழுவி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகதிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக காவிரி நதிநீர் தொடர்பான பிரச்சனைகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த பிரச்சனை தற்பொழுது மீண்டும் வெடித்துள்ளது. தமிழகத்தில் காவிரி நதி நீர் வேண்டும் என்றும் கர்நாடகத்தில் காவிரி நதி நீர் தரமாட்டோம் என்று புராணங்கள் நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது இயக்குநர் டிஜி.ஞானவேல் இயக்கத்தில் தலைவர்170 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் முக்கிய அறிவிப்புகளை படக்குழு தற்பொழுது வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு செல்வதற்காக நடிகர். ரஜினிகாந்த் அவர்கள் இன்று(அக்டோபர்3) சென்னை விமான நிலையம் வந்தார். அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சூழ்ந்தனர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் “ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றிக்கும் மேலே வந்துள்ளது. நான் தற்பொழுது தலைவர்170 படத்தின் படப்பிடிப்புக்காக செல்கிறேன். சமூக கருத்து கொண்ட திரைப்படமாக 170வது திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகப் போகின்றது. தலைவர் 170 திரைப்படம் முடிந்த பிறகு தலைவர் 171 திரைப்படம் தொடங்கும்” என்று கூறினார்.

அதன் பிறகு காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றார்.

காவிரி தொடர்பான கேள்விகள் எப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்கப்பட்டாலும் அந்த கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மௌனத்தை மட்டுமே பதிலாக அளித்து வருகிறார். தமிழகம், கர்நாடகம் இதில் எந்த மாநிலத்திற்கு ஆதராவக கருத்து கூறினாலும் ஒரு மாநிலத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பத் தொடங்கும். இதன் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் காவிரி தொடர்பான கேள்விகளுக்கு அமைதியை பதிலாக வைத்துள்ளார்.