ஜவான் திரைப்படத்திற்காக தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் குறித்து எழுந்த கேள்வி!!! பிரபல நடிகை தீபிகா படுகோன் ஓபன் டால்க்!!!

0
92
#image_title

ஜவான் திரைப்படத்திற்காக தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் குறித்து எழுந்த கேள்வி!!! பிரபல நடிகை தீபிகா படுகோன் ஓபன் டால்க்!!!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அவர்கள் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்கான சம்பளம் குறித்து எழுந்த கேள்விக்கு ஓபனாக கூறியுள்ளார்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் பிரபல நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் தியைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதிலும் வெளியானது. ரிலீஸ் ஆனது முதல் அதாவது செப்டம்பர் 7ம் தேதி முதல் தற்பொழுது வரை ஜவான் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. தற்பொழுது வரை ஜவான் திரைப்படம் 650 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜவான் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அவர்கள் ஜவான் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் நடிகை தீபிகா படுகோன் அவர்கள் “ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்காக நான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. நான் கேமியோ ரோல்களில் நடிக்கும் திரைப்படங்களுக்கு எந்த பணமும் வாங்குவதில்லை. ரோஹித் ஷெட்டிக்கும் அப்படி தான்” என்று கூறியுள்ளார். நடிகை தீபிகா படுகோன் அவர்கள் தீபிகா சர்கஸ், 83 ஆகிய திரைப்படங்களிலும் கேமியோ ரோல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.