Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆளுநரிடம் கேள்வி கேட்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : பாஜகவினர் எச்சரிக்கை!!

 

ஆளுநரிடம் கேள்வி கேட்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : பாஜகவினர் எச்சரிக்கை!!

 

 

 

நீட் தேர்வு விலக்கு குறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய மத்திய அரசு ஊழியரை டிஸ்மிஸ் செய்யாவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என சேலம் மாவட்ட பாஜகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம், சென்னையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட

 

அம்மாசியப்பன் என்பவர் நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். இவர், சேலம் உருக்காலை ஊழியராக இருக்கும், மத்திய அரசு பணியாளர் ஆவார்.

 

 

இவரின் கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர் ரவி அவர்கள், “ஒருபோதும் நீட் விலக்கிற்கு கையெழுத்திட மாட்டேன்” என்று தெரிவித்தார். அதன் பிறகு அம்மாச்சியப்பன் செய்தியாளர்களை சந்தித்து தனது தரப்பு வாதங்களையும், நீட் தேர்வு விலக்கு அவசியம் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசினார். இது சர்ச்சையானதோடு சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப்பட்டது.

 

 

இதையடுத்து, மத்திய அரசு ஊழியரான அம்மாசியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் வந்து உருக்காலை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர். புகாரில் அம்மாசியப்பன் பணிநீக்கம் செய்யாவிட்டால் பாஜக சார்பில் உருக்காலை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

மத்திய அரசு அல்லது மாநில அரசு ஏதேனும் சட்டத்தை பிறப்பித்தால் அது குறித்து கருத்து தெரிவிக்க அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உரிமை உண்டு. அப்படி இருக்க அம்மாசியப்பன் கூறிய கருத்துக்கு பாஜகவினர் எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும்? என சட்ட வல்லுநர்களும்; சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version