Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த அவலம் எல்லாம் இன்னும் சிறிது காலம் தான் !ஆர் எஸ் பாரதி கடும் கண்டனம் எதற்கு தெரியுமா!

சமூக செயற்பாட்டாளர் அருந்ததிராயின் பாடப்புத்தகம் நீக்கப்பட்டதற்கு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்.

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் ஆங்கில முதுகலைப் படிப்பில் சமூகப் போராளியான அருந்ததிராய் புத்தகம் பாடமாக இருக்கின்றது.

இந்த பாட புத்தகம் மாவோயிஸ்டுகள் பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதாக, சமீபத்தில் புகார் எழுந்தது இது தொடர்பாக ஆய்வு செய்ய சிண்டிகேட் கூட்டம் நடத்திய துணைவேந்தர் பிச்சுமணி அருந்ததிராய் பாடம் நீக்கப்படுவதாக அறிவித்தார்.

இதற்கு பதிலாக மாதவாய்யா கிருஷ்ணன் என்பவருடைய புத்தகத்தை இணைத் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மதுரை எம்பி வெங்கடேசன் திமுக ராசா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் , திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி அந்தப் புத்தகம் நீக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றார். அருந்ததிராய் பாடத்தை நீக்கியது போல வருங்காலத்தில் வரலாற்று தலைவர்களின் பெயரையும் நீக்குவார்கள் எனவும் அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது எல்லாம், திமுகவின் ஆட்சியில் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version