Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ரஜினியின் அரசியல் ஆலோசகர் 

Annamalai IPS

Annamalai IPS

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ரஜினியின் அரசியல் ஆலோசகர்

பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி.நடிகர் ரஜினிகாந்த அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறிய போது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ரஜினி அரசியல் கட்சி எதுவும் ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து அர்ஜுனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.

இந்நிலையில் தான் அவருடைய கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை தலைமையில் அவர் மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.

Exit mobile version