Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜயகாந்த் அடித்த அடியில் ராதிகாவிற்கு காதே கேட்காமல் போனதாம்! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!

#image_title

விஜயகாந்த் அடித்த அடியில் ராதிகாவிற்கு காதே கேட்காமல் போனதாம்! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!

தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார்.

முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, வெற்றி, சட்டம் ஒரு இருட்டறை, எங்கள் அண்ணா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட மொழிகளில் நடித்துள்ளார். 1984ல் தமிழில் ஒரே ஆண்டில் 18 படங்களை வெளியிட்ட நடிகர் என்ற வரலாற்றை படைத்தார்.

அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவில் ஜோடி என்றால் அது விஜயகாந்தும் ராதிகாவும்தான் என்று சொல்வார்கள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்தார்களாம். ஆனால், ஏதோ ஒரு பிரச்சினையால் இருவரும் பிரிந்து விட்டனராம்.

இருவரும் சேர்ந்து நடித்த அத்தனை படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர்களின் இருவரின் கெமிஸ்ட்ரியும் சூப்பராக இருக்கும்.

இயக்குனர் செந்தில்நாதன் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, அவர் விஜயகாந்த், ராதிகா குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

அது என்னவென்றால், ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக முதலில் ஜெயசுதாவை தயாரிப்பாளர்கள் நடிக்க வைக்க நினைத்தார்களாம். ஆனால், விஜயகாந்த், ராதிகாவை நடிக்க வையுங்கள். அவர்தான் பொறுத்தமாக இருப்பார் என்று கூறினாராம். அந்த நேரத்தில் ராதிகா பிஸியாக பல படங்களில் நடித்து வந்துள்ளார். அதனால், அப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி நடிக்க ஒத்துக்கொண்டாராம்.

அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ராதிகாவை விஜயகாந்த் அடிக்கிற மாதிரி ஒரு சீன் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். அப்போது, படப்பிடிப்பில் அந்த சீனில் ராதிகாவை விஜயகாந்த் அடிக்கும்போது, டைமிங் மிஸ் ஆகி ராதிகாவின் காதோரம் அந்த அறை விழுந்து விட்டதாம். அவர் அடித்த அடியில் ராதிகாவின் காதில் பட்டு காதே கேட்கமுடியாமல், வலியில் ராதிகா அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டாராம். கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்கள் என சொல்லி நிலைமையை சமாளித்துக் கொண்டாராம்.

இவ்வாறு அந்த பேட்டியில் அவர் மனம் திறந்து பேசினார்.

Exit mobile version