நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ராதிகாவை எங்கு பார்த்தாலும் உடனடியாக தன்னுடைய செருப்பை பார்ப்பாராம். இது குறித்து நடிகை ராதிகா அவர்களின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கக் கூடியது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ராதிகா இணைந்து நல்லவனுக்கு நல்லவன் மூன்று முகம் ஊர்காவலன் போக்கிரி ராஜா ரங்கா நன்றி மீண்டும் வருக போன்ற பல திரைப்படங்களை வெற்றி படங்களாக மாற்றியதோடு ரசிகர்களின் மனதிலும் இவர்களுடைய ஜோடி நீங்கா இடம் பிடித்திருக்கிறது. சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் வெற்றி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை ராதா தன்னை கண்டால் பல நடிகர்கள் பயப்படுவார்கள் என்றும் அது போலவே நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் தன்னை எங்கு பார்த்தாலும் உடனடியாக தன் காலில் உள்ள செருப்பை பார்த்து விடுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகை ராதா அளித்த விளக்கம் பின்வருமாறு :-
ஒரு நாள் ரஜினிகாந்த் அவர்களை ஒரு விழாவில் பார்த்ததாகவும் அப்பொழுது அவர் ரப்பர் செருப்பு போட்டுக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்த நடிகை ராதா. உடனடியாக அவரிடம் சென்று நீங்கள் பெரிய நடிகர் தானே ஏன் உங்களை சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் கூட அழைக்கிறார்கள் தானே ?? எனக்கேட்க நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் தயங்கியப்படியே ஆமாம் என தெரிவித்து இருக்கிறார்.
அதன் பின், இப்படிப்பட்ட நீங்கள் ஏன் இதுபோன்ற ரப்பர் செருப்பை போட்டுக் கொண்டு வருகிறீர்கள் என கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளிக்க தெரியாமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாராம். அதற்குப் பின் எங்கு ராதிகாவை கண்டாலும் உடனடியாக தன் காலில் அணிந்து இருக்கக்கூடிய செருப்பையும் பார்க்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டாராம் நடிகர் ரஜினிகாந்த். இது மட்டுமல்லாது கோச்சடையான் திரைப்படத்திற்கு லண்டனில் ஷூட்டிங் நடந்த பொழுது அங்கு போய் இருந்த ரஜினி ஷூ போட்டுக் கொண்டு போயிருக்கிறார். அதை பார்த்த ராதிகா ஷூ போட்டு கொண்டு வந்திருக்கிறீர்களே என கேள்வி கேட்க நீங்கள் வந்திருக்கிறீர்கள் என கூறினயுள்ளார். அதனால் தான் ஷூ போட்டுக் கொண்டு வந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.