Radish Benefits : முள்ளங்கியின் முத்தான முக்கிய பயன்கள்..!!

0
257
Radish Benefits in Tamil

Radish Benefits : முள்ளங்கியின் முத்தான முக்கிய பயன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

நல்ல உணவுகளை உண்பதால் மட்டுமே நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். நமக்கு நன்மை தரக்கூடிய காய்கறிகளில் முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சில நோய்களை குணப்படுத்தும் அற்புத மருந்தாக இருந்து வருகிறது. அதன் பயன்களை (benefits of radish) பார்ப்போம்.

முள்ளங்கியின் பயன்கள் : Radish Benefits in Tamil

  • முள்ளங்கியை உண்பதால் நல்ல பசியும், தொண்டை சம்பந்தமான வியாதிகள் குணமாவதுடன் குரலும் மென்மையாகிறது.
  • சிறுநீர் பையில் உருவாகும் கல்லை கரைக்கும் தன்மை உடையது. சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் மருந்தாக பயன்படுகிறது.
  • தேவையற்ற வாயுவை உடனடியாக வெளியேற்றுவதோடு, வெட்டை நோயையும் குணப்படுத்துகிறது.
  • முள்ளங்கியை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் முகப் பொலிவை கொடுக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும் செய்கிறது.
  • இதில் இருக்கும் நீர்சத்தானது, கோடை காலத்தில் உடலில் ஏற்படும் உஷ்ணங்களை தடுத்து உடலை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இயற்கையாகவே வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி நம்மை பாதுகாக்கிறது.
  • முள்ளங்கியின் இலை, கிழங்கு, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டவையாகும். ஆகவே உணவில் அடிக்கடி இதை சேர்த்துக் கொள்ளலாம்.
  • முள்ளங்கியை சூப் செய்து குடித்தால் நரம்புகளில் இருக்கும் சுருளை நீக்குகிறது. உடலில் உள்ள வியர்வை வெளியாகி புத்துணர்ச்சியை அளிக்கிறது.
  • சமைத்து உண்பதால் வயிற்று எரிச்சல், வாதம், குடைச்சல், சுவாச பிரச்சினை, இருமல் ஆகியவை நீங்கும்.
  • முள்ளங்கியின் இலைச்சாறை தினமும் இரண்டு வேளை 5 மில்லி அருந்தி வந்தால் வாதக்கட்டு, சூதகக்கட்டு, உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி போன்றவை குணமாகும்.

குறிப்பு :

இயற்கை வழியில் பயிரிடப்பட்ட முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.