Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நோய்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் முள்ளங்கி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?

#image_title

நோய்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் முள்ளங்கி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?
பலவிதமான நோய்களை விரட்டி அடிக்க உதவும் முள்ளங்கியை தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
முள்ளங்கி என்பது கிழங்கு வகைகளில் ஒன்று. இது மண்ணுக்கு அடியில் விளையக் கூடியதால் இதை கிழங்கு வகைகளில் சேர்த்துள்ளார்கள். இந்த முள்ளங்கியில் உடலுக்கு தேவையான ஊட்டசத்தக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, கால்சியம், போன்ற சத்துக்களும் உள்ளது.
முள்ளங்கி சாப்பிடுவதால் என்னென்ன நோய்கள் குணமடைகின்றது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
* முள்ளங்கியில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க மிகவும் உதவி செய்கின்றது.
* முள்ளங்கி சாப்பிடுவதால் நமது கண்பார்வை திறன் மேம்படும்.
* இதில் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் நம் எலும்புகளுக்கு வலிமை கிடைக்கின்றது.
* முள்ளங்கியை தினமும் சாப்பிட்டு வந்தால் நமது இதயம் பலம் பெறும்.
* முள்ளங்கியில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இதனால் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் காயங்களை விரைவாக ஆற்றும்.
* முள்ளங்கியில் ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் இருப்பதால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றது.
* முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டாக வைத்திருக்க உதவுகின்றது.
* சமீபத்திய ஆய்வுகளின். படி முள்ளங்கியை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படையும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
*  முள்ளங்கியை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம்.
* முள்ளங்கியை தினமும் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்தல் போன்ற முடி சம்பந்தமான பிரச்சனைகளையும் சரி செய்கின்றது.
Exit mobile version