ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தது வந்தடைந்தது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது கட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டு அதாவது,
பறவைகள் (ரஃபேல் போர் விமானங்கள்) அம்பாலாவில் பத்திரமாக தரை இறங்கின. ரஃபேல் போர் விமானங்கள், இந்திய ராணுவ வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளன.
இதனால் விமானப் படையின் தாக்குதல் திறனை பல மடங்கு அதிகரிக்கும் மேலும் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்க நினைப்பவர், இந்திய விமானப் படையின் தாக்குதல் திறனை கண்டு அச்சம் அடைவர்.
உலகில் தலைசிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட ரஃபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்வதற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் சரியான திட்டமிடுதலே காரணமாகும்.இந்த செயலுக்கு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் கொரோனா தொற்று பரவிவரும் சூழ்நிலையிலும், போர் விமானங்களை உரிய காலத்தில் ஒப்படைப்பதற்காக டசால்ட் ஏவிஏஷன் நிறுவனத்திற்கும் அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.