Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவால் 10 நாள் இடைவெளியில்  தாய் தந்தையை பறிகொடுத்த பிரபல நடிகருக்கு நேர்ந்த சோகம்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 19ஆம் தேதி தனது அம்மாவை இழந்த பிரபல பாலிவுட் நடிகர் கௌரவ் சோப்ரா,அடுத்த பத்து நாள் கழித்து 29ஆம் தேதி தனது தந்தையையும் கொரோனாவால் இழந்தார் 

தமிழில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒற்றன்‘ படத்தில் கௌரவ் சோப்ரா நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார். அதன்பின் தமிழில் டப் செய்யப்பட்ட ‘சிந்து பைரவி’ சீரியலின் மூலம் தமிழ்  ரசிகர்களை கவர்ந்தார்.

அதைத்தொடர்ந்து பாலிவுட் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தினார் தற்போது இவர் ஹிந்தி தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.இவன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 நாள் இடைவெளியில் தனது தாய் தந்தையை  பறிகொடுத்து ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினார். தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனம் உருக்கத்துடன் தனது தந்தையை பற்றி பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இவருக்கு  ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலை தளங்களின் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

Exit mobile version