நமது பாரம்பரியமிக்க உணவு தானியங்கள் என்றால் எப்பொழுதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.அரிசி உணவு பயன்படுத்துவதற்கு முன்னர் கம்பு,கேழ்வரகு,சோளம்,தினை,சாமை போன்ற சிறு தானிய உணவுகளே அதிகமாக உட்கொள்ளப்பட்டது.இந்த உணவுகளை உட்கொண்டதன் காரணமாக நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
அரிசி மற்றும் கோதுமை உணவுகள் மீது மோகம் கொண்டிருந்த மக்களுக்கு தற்பொழுதுதான் சிறுதானியங்களின் அருமை தெரிய வந்திருக்கிறது.ராகி,கம்பு போன்ற சிறுதானியங்களில் கூழ்,கஞ்சி,லட்டு,தோசை,சப்பாத்தி,பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடும் பழக்கம் நம்மிடம் அதிகரித்து வருகிறது.
இந்த சிறுதானியங்களில் நாம் அதிகம் பயன்படுத்தி வரும் ராகி அதாவது கேழ்வரகு ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.இந்த சிறுதானியத்தில் புரதம்,கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து,மெக்னீசியம் போன்ற முக்கியசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ராகியை தங்களுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து உட்கொள்ளுங்கள்.
வாரத்தில் ஒரு சிறுதானிய உணவையாவது நாம் சாப்பிட வேண்டியது முக்கியம்.ராகி உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் தெரிந்தால் நிச்சயம் நாள்தவறாமல் இதை உட்கொள்வீர்கள்.
ராகி உணவின் நன்மைகள:
1)உடலில் உள்ள சூட்டை குறைக்க ராகி உணவுகளை உட்கொள்ளலாம்.கோடை உஷ்ணத்தில் இருந்துவிடுபட ராகி கூழ்,ராகி பால் செய்து பருகலாம்.
2)இரத்த சர்க்கரை அளவு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க ராகி உணவை உட்கொள்ளலாம்.ராகி மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவை சாப்பிடுவதால் மன அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
3)உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து கட்டுக்கோப்பாக இருக்க ராகி உணவுகளை சாப்பிடலாம்.
4)பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க ராகி உணவு உதவுகிறது.சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள ராகி உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
5)ராகியில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக இருக்கிறது.மூட்டு வலி,எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ராகி உணவுகளை உட்கொள்ளலாம்.
6)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ராகி உணவுகளை சாப்பிடலாம்.இரத்த அழுத்தம்,இதய நோய்,கல்லீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தையும் குணப்படுத்திக் கொள்ள கேழ்வரகு உணவுகளை உட்கொள்ளலாம்.