Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராகு கேது பெயர்ச்சி – அஷ்டம சனியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? இதோ பாருங்கள்..

#image_title

ராகு கேது பெயர்ச்சி – அஷ்டம சனியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? இதோ பாருங்கள்…

கடக ராசியில் ராகு பகவானும், கேது பகவானும் பெயர்ச்சி செய்யும்போது, ராகு 9ம் இடத்திற்கும், கேது 3ம் இடத்திற்கும் மாற உள்ளனர். இந்த பெயர்ச்சியால் அஷ்டமசனி நடந்து கொண்டிருக்கக் கூடிய கடக ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

ராகு கேது பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம் –

வரும் அக்டோபர் 30ம் தேதி (ஐப்பசி 13) அன்றும், வரும் நவம்பர் 7ஆம் தேதி (ஐப்பசி 21) அன்று ராகு, கேது பெயர்ச்சி செய்ய உள்ளனர். இதனால், ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு மாற இருக்கிறார். கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்ய உள்ளார்.

ராகு, கேது பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. குடும்பத்தில் மனைவியுடன் நல்ல இணக்கம் ஏற்படும். அவர்களை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். நிதி நிலை சீராகும். பழைய கடன் அடைக்கப்படும். வேலை, தொழில், கல்வி பலப்படும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள். திடீரென்று வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வீர்கள். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். தொழில் வளர்ச்சி சிறக்கும்.

வேலை செய்யும் இடத்தில் சூழ்நிலை இணக்கமாக மாறும். உங்கள் திறமைகள் வெளிப்படும். அதனால், உங்களுக்கு ஏற்றமும் மரியாதை கூடும். அதே சமயம் உங்களுக்கான வேலையில் அலட்சியம் வேண்டாம். உங்கள் வேலைகளை யாரிடமும் கொடுக்க வேண்டாம்.

Exit mobile version