Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வலிமையை புரிந்து கொள்ளாமல் சிறு பிள்ளையாய் இருக்கிறார்! ராகுல் காந்தியை சாடிய பிரசாந்த் கிஷோர்!

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற வியூகம் வகுத்து கொடுத்து வருகின்றார். கடந்த 2014ஆம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற வியூகம் வகுத்து கொடுத்தவரும் இவர்தான்.

இந்த வருடம் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தேர்தல் பணியில் ஈடுபட்டவர் பிரசாந்த் கிஷோர் இரு கட்சிகளுமே ஆட்சியை கைப்பற்றினார்கள். இதனையடுத்து எதிர்வரும் 2014 ஆம் வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பணியாற்ற பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று சொல்லப்படுகிறது.

அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை சீரமைக்க தன்னை சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் விரும்பியதால் இந்த பேச்சுவார்த்தையில் முடிந்ததாக சொல்லப்படுகிற அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். கோவா சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை வழங்க கோவா சென்ற பிரசாந்த் கிஷோர் அந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் தெரிவித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது பாரதிய ஜனதா கட்சி இன்னும் பத்து வருட காலம் இந்திய அரசியலின் மையமாக திகழும் அந்த கட்சி வெற்றி பெற்றாலும் சரி தோற்றாலும் சரி சுதந்திரம் அடைந்த முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் கட்சி எவ்வாறு இருந்ததோ அதே போல பாரதிய ஜனதா ஜொலிக்கும் என்று தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி எங்கும் சென்று விடாது தேசிய அளவில் 30 சதவீதத்திற்கு மேல் ஓட்டு வாங்கி இருக்கும் சமயத்தில் பாரதிய ஜனதா கட்சி விழுந்துவிடும் என்று அவசரப்பட்டு நினைத்துவிட வேண்டாம். ஆகவே பொதுமக்கள் கோபமடைந்து மோடியைத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற மாய வலைக்குள் விழுந்து விட வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்.

அவர்கள் மோடியை வேண்டுமென்றால் தூக்கி எறியலாம் ஆனால் பாரதிய ஜனதா கட்சி இங்கேதான் இருக்கப்போகிறது எங்கும் சென்று விடாது இன்னும் பல வருடங்களுக்கு அந்த கட்சியுடன் போட்டியிட்டு தான் ஆக வேண்டும். இதை புரிந்து கொள்ள மறுப்பது தான் ராகுல் காந்தியிடம் இருக்கக்கூடிய பிரச்சனை. ஒரு காலகட்டத்தில் மோடியை பொதுமக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது நடக்கப்போவதில்லை மோடியின் வழியை ஆராய்ந்து அதனை புரிந்து கொண்டு கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படாத வரை மோடியை தோற்கடிக்கும் அளவிற்கு ஒரு போட்டியை உருவாக்க ராகுல் காந்தியால் எப்போதுமே முடியாது என்று தெரிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

Exit mobile version