Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது! ராகுல் காந்தி கண்டனம்!

பிரியங்கா காந்தி கைது நடவடிக்கையை ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் நடந்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சுட்டு கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் உத்திரபிரதேச மாநில கிழக்கு பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி இன்று சோன்பத்ரா பகுதிக்கு வந்தார். 

பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேசத்தில் உள்ள நாராயண்பூர் எனும் பகுதியில் பிரியங்கா காந்தி வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இங்கு உங்களுக்கு வர அனுமதி இல்லை என கூறினர். இதனால் உடனடியாக பிரியங்கா காந்தி, அதே இடத்தில் பிரியங்கா காந்தி தொண்டர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி மற்றும் அவருடன் ஈடுபட்டவர்களை தொண்டர்களையும் போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதை அறிந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தாரை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை அனுமதிக்காமல் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை சட்டத்தை மீறி கைது செய்வதா இது சட்டத்திற்கு எதிரான செயல். என உத்திரபிரதேச அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டமீறலாக பிரியங்காவை போலீசார் கைது செய்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து வெளியேற மறுத்த சுட்டுக் கொல்லப்பட்ட 10 பழங்குடியினரின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற பிரியங்காவை தடுத்து நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேச அரசின் விதிமீறல் செயல் ஆகும். 

பிரியங்கா காந்தி கைது நடவடிக்கை மற்றும் தன் சொந்த நிலத்தை காப்பாற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்களை துப்பாக்கி சூடு நடத்தி 10 பேர் கொல்ல பட்டது. இதன் மூலம் அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதை அறியலாம் என்று தனது கண்டன செய்தியில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Exit mobile version