Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரான போராட்டம்” – இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது.

டெல்லியின் ராஜ்காட் பகுதியில் இன்று மதியம் 3 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வருமாறு மாணவர்கள், இளைஞர்களுக்கு  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மாணவர்களே, இளைஞர்களே நீங்கள் இந்தியர்களாக உணர்ந்தால் மட்டும்  போதாது. இது போன்ற தருணத்தில், நீங்கள் இந்தியர்கள் என காட்டுவதோடு மட்டுமல்லாமல், வெறுப்புணர்வால் இந்தியாவை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை  நீங்கள் வெளிக்காட்டுவது மிகவும் முக்கியமானது.  மோடி மற்றும் அமித்ஷாவால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள   வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக  ராஜ்காட்டில் இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version