லடாக் சென்ற ராகுல் காந்தி… பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!

0
110

 

லடாக் சென்ற ராகுல் காந்தி… பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் லடாக் சென்றுள்ளார். லடாக்கில் இவர் பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வரைலாகி வருகின்றது.

 

காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி அவர்கள் தற்பொழுது லடாக்கிற்கு புற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக இது குறித்து பைக் மெக்கானிக்குகளுடன் பேசிய இராகுல் காந்தி அவர்கள் “எனக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். ஆனால் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அதை அடிக்கடி செய்ய முடியவில்லை என்று கூறினார்.

 

இந்நிலையில் இராகுல் காந்தி அவர்கள் இன்று(ஆகஸ்ட்19) லடாக் பயணம் சென்றுள்ளார். மேலும் இவரது லடாக் பயணம் ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்படுகின்றது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி சட்டப்பிரிவு 370 மற்றும் 35(ஏ) ரத்துச் செய்யப்பட்டதை அடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் ஜே-கே என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதற்கு பிறகு இராகுல் காந்தி செய்யும் முதல் பயணம் இது தான்.

 

இந்நிலையில் இராகுல் காந்தி அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லடாக்கில் இருப்பது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் “நான் பாங்காங் ஏரிக்கு செல்கிறேன். இந்த இடம் உலகின்.மிக அழகான இடங்களில் ஒன்று என எனது தந்தை கூறுவார்” என்று பதிவிட்டுள்ளார்.

 

முன்னாள் பிரதமரும் இராகுல் காந்தி அவர்களின் தந்தையுமான ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள் நாளை அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. ராகுல் காந்தி அவர்கள் தனது தந்தையின் பிறந்தநாளை பாங்காங் ஏரிக்கு சென்றுதான் வழக்கமாக கொண்டாடுவார். இந்நிலையில் நாளை(ஆகஸ்ட்20)

இராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இராகுல் காந்தி அவர்கள் லடாக் சென்றுள்ளார்.