Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

#image_title

ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மீண்டும் ஜனவரி 14ம் தேதி முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

காங்கிரஸ் கட்சியினரிடையே புத்துணர்ச்சியை அளிக்கும் விதமாகவும் நாட்டு மக்களை சந்திக்கும் விதமாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டார். இது காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியை அளித்தது.

ராகுல் காந்தி அவர்களின் இந்த யாத்திரை வெற்றியடைந்ததை அடுத்து நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இது குறித்து தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி ராகுல் காந்தி அவர்கள் அடுத்த கட்ட நடைபயணத்தை மணிப்பூர் முதல் மும்பை வரை மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்த நடைபயணத்தை ஜனவரி 14ம் தேதி தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும் இந்த நடைபயணத்திற்கு பாரத் நியாய் யாத்ரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் தொடங்கும் இந்த பாரத் நியாய் யாத்ரா என்ற பாதயாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் ராகுல் காந்தி அவர்களின் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாதயாத்திரையை மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

ராகுல் காந்தி அவர்கள் மேற்கொள்ளும் இந்த பாரத் நியாய் யாத்ரா நடைபயணம் 14 மாநிலங்களில் இருக்கும் 85 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த பாரத் நியாய் யாத்ரா நடைபயணம் நாகலாந்து, மணிப்பூர், அசாம், மேற்கு வங்காளம், மேகாலயா, பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்திரபிரதேசம், சதீஷ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 6200 கிலோ மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி அவர்கள் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த பாரத் நியாய் யாத்ரா நடைபயணமானது பாரத் ஜோடோ யாத்ரா நடைபயணத்தை போல முழுக்க முழுக்க நடைபயணமாக இருக்காது. மக்களை அதிக அளவில் சந்திக்கும் விதமாக பாரத் நியாய் யாத்ரா நடைபயணத்தின் பெரும்பகுதி பேருந்தில் பயணிக்கும் விதமாக இருக்கும் என்றும் பேரணி நடக்கும் சில பகுதிகளில் மட்டும் நடைபயணம் இருக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

Exit mobile version