Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி! பிறந்த நாள் வாழ்த்து!

நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் கமல் இன்றைய தினம் தன்னுடைய 66 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதன் காரணமாக அவருக்கு திரை உலக பிரபலங்களும், கலைஞர்களும், மற்றும் அரசியல்வாதிகளும், வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

திரையுலகின் முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் கமல்ஹாசன் பல சாதனைகளை புரிந்து இருக்கின்றார். பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், என பன்முகத் தன்மை கொண்டவர் கமல் இப்போது அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் கமலுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார். இது சம்பந்தமாக அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் நவீன தமிழ் கலாச்சாரத்திற்கு பங்களித்த ஒரு வலுவான குரல் கொண்ட மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version