Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகள் வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு! உஷாரான மத்திய அரசு!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .மத்திய அரசு விவசாயிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு பார்த்தது. ஆனாலும் இது சம்பந்தமாக எந்த ஒரு சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. ஆகவே புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்றைய தினம் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள். மனித உரிமை செயல்பாட்டாளர்கள் சூழலியல் ஆர்வலர்கள்,பத்திரிகை, மற்றும் ஊடகவியலாளர்கள், திரைக்கலைஞர்கள் வழக்கறிஞர்கள் என்று சமுதாயத்தில் இருக்கக்கூடிய எல்லாத் தரப்பினரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்றைய தினம் ரயில் மறியல் போராட்டம் செய்யப்படும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்து இருக்கின்றன. இன்று பகல் சரியாக 12 மணி அளவில் ஆரம்பித்து மாலை 4 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் உடைய இந்த திடீர் அறிவிப்பு காரணமாக, உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா, போன்ற மாநிலங்களில் ரயில்நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

Exit mobile version