Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்த்து விவசாயிகள் ரயில் மறியல் !!

விவசாய மசோதாவுக்கு எதிர்த்து இந்திய நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் 3 விவசாய மசோதாக்கள் நிறைவேற்றியதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பஞ்சாப் ,ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த விவசாயிகள் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைவதை தொடர்ந்து, வடக்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தலைமை அதிகாரி தீபக்குமார் அறிவித்துள்ளார்.

அதன்படி அமிர்தசரஸ் – ஜெயநகர் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 25- ஆம் தேதி (இன்று) ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் செப்டம்பர் 27-ம் தேதி இயக்கப்படவிருந்த ஜெயநகர் – அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையான இன்று இயக்கப்படவிருந்த உனா ஹிமாச்சல் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும், செப்டம்பர் 24-ஆம் தேதி (நேற்று) முதல் செப்டம்பர் 26ம் தேதி (நாளை) வரை இயக்கப்படவிருந்த அமிர்தசரஸ் -மும்பை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையாது, செப்டம்பர் 25- ஆம் தேதி (இன்று) முதல் செப்டம்பர் 27 வரை இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version