Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவை விரட்ட களத்தில் இறங்கிய ரயில்வே துறை : அமைச்சர் வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மத்திய அரசு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணியவும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுமாறும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிறரை தொடுவதால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க ஹேண்ட்சனிடைசர் எனப்படும் கிருமி நாசினியை கைகளில் தடவுமாறு கூறியுள்ளது.

இதனால் நாடு முழுவதும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட சில நிறுவனங்கள் தரமற்ற முகக்கவசம் மற்றும் போலி கிருமிநாசினிகளை தயாரித்து விற்பனைக்கு விடுவதாக தகவல்கள் எழுந்தன.

இவ்வாறான சூழலில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரயில்வே துறை ஊழியர்கள் தரமான மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ரயில்வேத்துறை அமைச்சரை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version