Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரயில்வேயில் வேலைவாய்ப்பு: இரண்டு தினங்களே உள்ளது உடனே விண்ணப்பியுங்கள்! எழுத்து தேர்வு கிடையாது!

ரயில்வேயில் வேலைவாய்ப்பு: இரண்டு தினங்களே உள்ளது உடனே விண்ணப்பியுங்கள்! எழுத்து தேர்வு கிடையாது!

தெற்கு ரயில்வேவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்த நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி விண்ணப்பதிவு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகும். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

ரயில்வே துறையில் பணிபுரிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வுகள் எதுவும் இல்லாமல் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு.

தெற்கு ரயில்வேயில் ரயில்வே பணிமனைகளில் மாதம் உதவி தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10- ஆம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி அளிக்கப்படும் தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் 10-ஆம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியின் போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ. 6000, ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ 7000 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்படும்.

மேலும் விண்ணப்ப கட்டணம் ரூ.100 பெறப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Exit mobile version