Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மர்ம நபர் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்!! ரயில் பெட்டிகளை ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி அதிகாரிகள் ஆய்வு!!

#image_title

மர்ம நபர் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்!! ரயில் பெட்டிகளை ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி அதிகாரிகள் ஆய்வு!!

கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதியை கடக்கும் போது மர்ம நபர் ஒருவர் அங்கிருந்து ரயில் பயணிகள் மீது பட்டோலை ஊற்றி தீ வைத்தார்.

இதில் 15 க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். மூன்று சடலங்கள் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவம் கேரளாவை மட்டும் இன்றி நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், தீ வைத்த நபர் டெல்லி அருகே நொய்டி பகுதியை சேர்ந்த ஷாருக் சைஃபி என கண்டறியப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையில் ஐஜி ஈஸ்வர ராவ் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்ற ரயிலின் இரண்டு பெட்டிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அவரோடு ரயில்வே பாதுகாப்பு படையின் சக அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதியான எலத்தூர் பகுதியிலும் ஐஜி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.

இதற்கு இடையே ரயில்வே பாதுகாப்பு படையில் தனிப்படையைச் சேர்ந்த ஒரு குழு நொய்தாவிற்கு விசாரணைக்காக சென்றுள்ளது. பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version