பயணிகள் டிக்கெட் கட்டணம் வருமானம் எவ்வளவு?
ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
ஆனால் தற்போது புதிய ரயில்கள் இயக்குவதை தவிர்த்து வருகிறது மாறாக கூடுதல் கட்டண சிறப்பு ரயில்கள் போன்றவை அதிக அளவில் இயக்கப்படுகிறது.
முன்பு பண்டிகை காலங்களில் வழக்கமான கட்டணத்தில் அதிக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
ஆனால் தற்போது அதிக கட்டண சிறப்பு ரயில்கள் அதுவும் குறைவான அளவில்தான் இயக்கப்படுகிறது இதனால் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்படுகின்றன பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படும் நேரங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் உள்ள ஆறு கூட்டத்திலும் கடந்த ஆண்டைவிட ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது 2017-18 ஆம் ஆண்டில் ரயில் பயணிகள் எண்ணிக்கை 81கோடியே 43 லட்சம் ஆனால் நடப்பு ஆண்டில் அதைவிட இரண்டு கோடி அதிகரித்து 83 கோடியே 77 லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இது 2.9 சதவீதம் அதிகம் பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலம் கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேக்கு 4819 கோடியும் நடப்பாண்டில் ஆயிரத்து 5184 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகமாகும்.