தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு இருப்பதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழையும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகின்றது.
இந்நிலையில் இன்று வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் இதனோடு சேர்ந்து நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி,கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம்,கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும் என்றும்,
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.